Sunday, 18 February 2018

சிறுமி ஹாசினி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு



சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து ஜாமினில் வெளியில் விடப்பட்டார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த அதிர்வலைகள் அடங்கும் முன்னரே தஷ்வந்த் தனது தாயாரை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவான தஷ்வந்தை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.-http://tamilmovieteaser247.blogspot.in-http://tamilmovieteaser247.blogspot.in/2018/02/blog-post_19.html